HOD’s Desk
அனைவருக்கும் வணக்கம்!
கல்லூரியின் தனித்துறையாக 2016-ஆம் கல்வியாண்டில் தோற்றம் பெற்றது தமிழ்த்துறை. முழுநேரப் பேராசிரியர் கொண்ட துறையாக வளர்ச்சி பெற்ற இத்துறை தமிழை இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்யும் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்றுவிக்கிறது.
கல்லூரியின் பாடத்திட்டம் மாணவர்களுக்குக் கவிதை எழுதுவதற்கும், கதை புனைவதற்கும் வழிகாட்டுகிறது. இதழியல் துறையில் பணியாற்ற விரும்பினாலும் அதற்கேற்றதான பாடங்களைக் கொண்டதாகப் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்லூரியில் எந்தத் துறையை விரும்பிப் படித்தாலும் சமூகத்துடன் இணக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள மொழி சார்ந்த அறிவு மாணவர்களுக்கு அவசியமாகிறது.
உதாரணமாக, பொதுவெளிகளில் சமூக விழிப்புணர்வு சார்ந்த நாடகங்களை அரங்கேற்றவும், மக்களோடு நெருங்கிப் பழகவும் தமிழ்மொழி ஒரு பாலமாக அமைவதால் இப்பாடம் முக்கியமானதாக இருக்கிறது.
பத்தாம் வகுப்பிலோ அல்லது பன்னிரண்டாம் வகுப்பிலோ தமிழை இரண்டாம் மொழியாகப் படிக்காத மாணவர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் அடிப்படைத் தமிழ்ப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது. வேற்று மாநிலத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்பாடத்திட்டம் பயனளிக்கிறது.
இத்துறையின் சார்பில் தொடங்கப்பட்ட ‘முத்தமிழ்ப் பேரவை’ என்ற இலக்கிய அமைப்பு மாணவர்களின் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும், நடிப்புத் திறனையும், இசையையும் வளர்த்தெடுக்கிறது. துறை சார்ந்து வெளியிடப்படும் ‘தகளி’ என்ற இதழும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இளநிலை படிக்கும் மாணவர்களின் கல்வியறிவையும், கலைநுட்பத்தையும் பாதுகாக்கும் ஒரு துறையாக விளங்குகிறது என்று குறிப்பிடலாம்.
முனைவர் சி.ஆர். மஞ்சுளா
Contact Us
முனைவர் சி. ஆர். மஞ்சுளா, M.A., M.Phil., Ph.D.
துறைத் தலைவர்
Phone : 99404 08794
Email : manjula@mssw.in