முத்தமிழ்ப் பேரவை

மாணவர்களின் தமிழார்வத்தை வளர்க்கும் விதமாக முத்தமிழ்ப் பேரவை மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடங்கப்பட்டது. தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையரின் பிறந்தநாளை மையமாகக் கொண்டு 20.02.2017 அன்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் அன்றைய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் உலகநாயகி பழநி அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றில் தங்கள் திறமையை மாணவர்கள் வெளிப்படுத்த ஒரு களமாக இப்பேரவை செயல்படுகிறது.
விரிவுரை ஏற்பாடு செய்வது, கருத்தரங்கம் நடத்துவது, போட்டிகளை முன்னெடுப்பது, விழிப்புணர்வுக்கு வழிகாட்டுவது, முக்கியத் தினங்களைக் கொண்டாடுவது என்று விரிவடைந்து உள்ளது இதன் பணி. ‘தகளி’ என்ற கல்லூரியின் படைப்புகள் தாங்கிய தமிழ் இதழும் சமீப காலமாக வெளி வருகிறது.

Co-ordinator’s Desk

மொழியைச் சரியான முறையில் பயன்படுத்த தெரிந்த ஒருவருக்கு உலகத்து மக்கள் எல்லோரும் சொந்தங்களாக மாறிவிடுவர். எல்லாத் துறைகளிலும் மொழியின் பயன்பாடு அளப்பரியது. அந்த வகையில் மொழி ஆளுமை கொண்ட மனிதர்களாக மாற்றுவதற்குக் கல்வியோடு மற்ற கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

தன் வகுப்பிலும், தன் வகுப்பைத் தாண்டிக் கல்லூரி அளவிலும், தன் கல்லூரி இல்லாத மற்ற கல்லூரிகளிலும் சென்று மாணவர்கள் தங்கள் தமிழ்மொழி அறிவை வெளிப்படுத்த துணை செய்கிறது முத்தமிழ்ப் பேரவை.

வளரும் பருவத்தில் ஆரோக்கியமான போட்டிகள் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும். ஏட்டுக் கல்வியோடு நிற்காமல் சமூக அக்கறையோடு அந்தந்தக் காலத்தின் சிக்கல்களை அலசி ஆராய்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களை ஊக்குவிப்பது இப்பேரவையின் தனிச்சிறப்பு.

Contact Us

20190226_211927-manjula-c-r

முனைவர் சி. ஆர். மஞ்சுளா

Assistant Professor
Department of Tamil

Phone : 99404 08794
Email : manjula@mssw.in

Start typing and press Enter to search

Skip to content