News & Events

தமிழால் உலகை வெல்லலாம்!

<< Back
Venue :
Conference Hall
Date :
20-Feb-2017

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 162வது பிறந்தநாளையொட்டி…

சென்னை சமூகப்பணி கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ்த்தாத்தா டாக்டர். உ.வே. சாமிநாதையர் பிறந்தநாளையொட்டி முத்தமிழ்ப் பேரவை தொடக்க விழா 20.02.2017 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இனிது நடந்தது.  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் உலகநாயகி பழநி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழால் உலகையே வலம் வரலாம் என்றும் உலகையே வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்றும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.  நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஏறுதழுவுதல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது, மாணவர்களின் சிந்தனையை முடுக்கிவிடுவதாக அமைந்தது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். இராஜா சாமுவேல் ஆற்றிய தலைமையுரையில் தமிழ்ப் பாடத்தின் உயர்வு புரிந்தது.

Staff Login

Please enter your user name and password to login