News & Events

மொழிப்பற்று என்பது மொழிவெறியல்ல

<< Back
Venue :
Conference Hall
Date :
21-Feb-2018

சென்னை சமூகப்பணி கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடந்த முத்தமிழ்ப் பேரவை விழா (21.02.2018) உலகத் தாய்மொழி தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்தது.  மதியம் 2.00 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் முனைவர் அ.மு. சுவாமிநாதன், இ.ஆ.ப. (ஓய்வு) தலைமை ஏற்று மொழியின் அவசியத்தை வலியுறுத்தினார்.  பாரம்பரியமிக்க இதழான ‘கலைமகள்’ இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். “பல்வேறு மொழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.  அவை உங்களுக்குக் கூடுதல் தகுதியைத் தரும்.  ஆனால் தாய்மொழி மீது எப்போதுமே தனிப்பற்று வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.  முதல்வர் முனைவர் எஸ். இராஜா சாமுவேல் தன் வாழ்த்துரையில் செம்மொழித் தகுதிக்கான பண்புகளை விளக்கினார். 

கல்லூரியிலேயே முதன் முறையாக மாணவர்கள் படைப்பு தாங்கிய அரையாண்டுத் தமிழிதழ் ‘தகளி’–யை கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்  பலத்த கரவொலிக்கு இடையில் வெளியிட்டார்.  தொடர்ந்து ‘இந்தியா உலகிற்கு அளிக்கும்’ என்னும் பொருளில் அமைந்த பேச்சுப்போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர்.  இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிட்ட மாணவர்கள் மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றிற்கு உயிர் கொடுத்தனர்.  இந்திய மருத்துவம், பண்பாடு, கலை என்று பல கருத்துக்களையும் தங்கள் சொல்லாற்றலால் நிலை பெறச் செய்தனர்.   ஆரம்பத்தில் பாடப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மற்றும் இறுதியில் ஒலித்த ‘நாட்டுப்பண்’ ஆகியவை நிகழ்ச்சிக்குக் கூடுதல் சிறப்பு சேர்த்தன.

Staff Login

Please enter your user name and password to login